Loading...
தொகுதி மறுவரையறை மசோதா: ராகுல் காந்தி வேண்டுகோளுக்கு 'கட்டபொம்மன், எட்டப்பன்' உதாரணத்துடன் மு.க.ஸ்டாலின் பதிலடி
ராகுல் காந்தி வேண்டுகோளுக்கு 'கட்டபொம்மன், எட்டப்பன்' உதாரணத்துடன் மு.க.ஸ்டாலின் பதிலடி

தொகுதி மறுவரையறை மசோதா: ராகுல் காந்தி வேண்டுகோளுக்கு 'கட்டபொம்மன், எட்டப்பன்' உதாரணத்துடன் மு.க.ஸ்டாலின் பதிலடி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 29, 2026
03:31 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை நவம்பர் 30 தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மற்றும் அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று இறுதிக்கட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் ஸ்டாலினைச் சந்திக்க சென்னை புறப்படுவதற்கு முன்பாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். மக்களவை இடங்களை 850-ஆக உயர்த்துவது இந்திய ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என ராகுல் காந்தி எச்சரித்த நிலையில் தமிழ்நாட்டின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.

ராகுல் காந்தி எச்சரிக்கை

850 இடங்கள் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணிக்கு சாதகமாக அமையும் என ராகுல் காந்தி எச்சரிக்கை

தனது எக்ஸ் தள பதிவில் சகோதரர் ஸ்டாலின் என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி தமிழ் விரோத சக்திகளுக்கு எதிராக அவர் எப்போதும் பாறை போல உறுதியாக நின்றதாகப் பாராட்டியுள்ளார்.

மக்களவையின் பலத்தை 850 இடங்களாக உயர்த்துவது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இந்தியாவின் ஒட்டுமொத்தத் தேர்தல் வரைபடத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க வரம்பற்ற இடத்தைக் கொடுத்துவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

எனவே தேச நலன் தமிழ்நாட்டின் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்க இந்த மசோதாக்களை இணைந்து தோற்கடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பரபரப்பு பதில்

வரலாறு எங்களை கட்டபொம்மன்களாகவே பார்க்கும் என மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு பதில்

ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு நன்றி தெரிவித்து பதிலளித்த மு.க.ஸ்டாலின் அரசியலமைப்பு மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்று பங்கை அங்கீகரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு மனமார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டே திமுக எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் பாதையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் வரலாறு எங்களை கட்டபொம்மன்களாகவே தீர்ப்பளிக்கும் எட்டப்பன்களாக அல்ல என்றும் ஸ்டாலின் உறுதியாகக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

சரத் பவார் சந்திப்பு

தமிழகத்தின் 7.18% பங்கு பாதுகாக்கப்பட்டதால் திமுக ஆதரவும் சரத் பவார் சந்திப்பும்

மக்களவையில் தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீத இடப் பங்கு குறைக்கப்படக் கூடாது மற்றும் 1971 மக்கள்தொகை அடிப்படையிலான மாநில விகிதாச்சாரம் 2051 வரை பாதுகாக்கப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் திமுக இம்மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளது.

இதற்கிடையே ஏப்ரல் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆளும் தவெக அரசுக்குக் காங்கிரஸ் ஆதரவளித்ததால் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

இந்த சூழலில் சென்னையில் ஸ்டாலினை சந்திக்கும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று மாலை மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்துப் பேச உள்ளனர்.

ADVERTISEMENT