Page Loader
இந்திய அரசியல் முதல் சீன அரசியல் வரை: ராகுல் காந்தி-கமல் விவாதம்
பாரத் ஜோடோ யாத்திரையில் கமல் ஹாசன் மற்றும் ராகுல் காந்தி(படம்: Indian Express Tamil)

இந்திய அரசியல் முதல் சீன அரசியல் வரை: ராகுல் காந்தி-கமல் விவாதம்

எழுதியவர் Sindhuja SM
Jan 02, 2023
03:52 pm

செய்தி முன்னோட்டம்

ராகுல் காந்தி, கன்யாகுமரியில் ஆரம்பித்து காஷ்மீரில் முடியும் பாரத் ஜோடோ யாத்திரை என்னும் நடைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார். அடுத்து வரும் தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதற்கே இந்த நடைபயணத்தை அவர் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடைபயணம் 9 மாநிலங்களை கடந்து சமீபத்தில் டெல்லிக்குள் நுழைந்தது. ராகுல் காந்தி டெல்லிக்குள் நுழையும் போது பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருடன் இந்த பயணத்தில் கலந்து கொண்டனர். அதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் ஒருவர் ஆவார். அன்று, ராகுலுடன் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட கமல் ஹாசன், அதன் பின், ராகுலின் வீட்டிற்கும் சென்று சந்தித்து பேசி இருக்கிறார். அவர்கள் உரையாடும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட ராகுல் காந்தி-கமல் வீடியோ!