பங்குச் சந்தைகள், ரூ.55,000 ரொக்கம்: ராகுல் காந்தி தாக்கல் செய்த ரூ.20 கோடி சொத்து மதிப்புள்ள பத்திர பிரமாணம்
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பங்குச் சந்தை முதலீடுகள், பரஸ்பர நிதிகள், வங்கி டெபாசிட்கள் உட்பட மொத்தம் ரூ.20 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அடங்கும்.
மேலும் அவருக்கு ரூ.49.7 லட்சம் கடன்கள் இருப்பதாகவும் அந்த பிராமண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் நிற்கவுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதற்காக புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பங்குச் சந்தை முதலீடுகள் ரூ.4.3 கோடியும், மியூச்சுவல் ஃபண்ட் டெபாசிட் ரூ.3.81 கோடியும், வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சமும் உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.
சொத்து மதிப்பு
ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு
2022-23 நிதியாண்டில் தன்னிடம் ரூ. 55,000 ரொக்கமாகவும், மொத்த வருமானம் ரூ.1,02,78,680 (ரூ.1.02 கோடி) என்றும் அவர் அறிவித்தார்.
15.2 லட்சம் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களையும் ராகுல் காந்தி வைத்துள்ளார்.
61.52 லட்சம் மதிப்பிலான தேசிய சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் சேமிப்பு மற்றும் காப்பீட்டுக் கொள்கைகளில் முதலீடு செய்துள்ளார்.
பிரமாணப் பத்திரத்தின்படி, காங்கிரஸ் தலைவரின் நகைச் சொத்து மதிப்பு ரூ.4.2 லட்சம்.
அவரது அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.9.24 கோடியாகவும், அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.11.14 கோடியாகவும் உள்ளது.
அவரது வேட்புமனுவுடன் வழங்கப்பட்ட விவரங்களின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.20 கோடிக்கு மேல் உள்ளது.