Page Loader
புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை தந்தம் முதல்வரிடம் ஒப்படைப்பு
புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை தந்தம் முதல்வரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை தந்தம் முதல்வரிடம் ஒப்படைப்பு

எழுதியவர் Nivetha P
Mar 30, 2023
05:07 pm

செய்தி முன்னோட்டம்

புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த யானை லட்சுமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி உயிரிழந்தது. இந்த யானை உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலம் மட்டுமின்றி மற்ற மாநில மற்றும் வெளிநாட்டு வாழ் பக்தர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்த யானையை காக்க பாகன் பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் பரிதாபமாக யானை அங்கேயே உயிரிழந்தது. திடீர் இருதய அடைப்பு காரணமாக மயங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானை லட்சுமியின் உடல் தந்தம் நீக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தந்தத்தினை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் வனத்துறை ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை தந்தம் முதல்வரிடம் ஒப்படைப்பு