Page Loader
தமிழகம், புதுச்சேரி: அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது

தமிழகம், புதுச்சேரி: அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Aug 05, 2023
02:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 8 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 11 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் அதிபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி வரை இருக்க வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.

ட்விட்டர் அஞ்சல்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பதிவான இடங்கள்