
புயல் எச்சரிக்கை - டிசம்பர் 4ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது புயலாக மாறும் பட்சத்தில் வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிசம்பர்-4ம்.,தேதி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, புதுச்சேரி துறைமுகத்தில் இன்று(டிச.,1)ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
எனவே, மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம் என்றும்,
இத்தடையினை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பள்ளிகளுக்கு விடுமுறை
#JUSTIN | புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் பகுதிகளில் வரும் 4ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவு#SunNews | #Puducherry | #CycloneMichaung pic.twitter.com/cnZYCKFXk0
— Sun News (@sunnewstamil) December 1, 2023