Page Loader
புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

எழுதியவர் Nivetha P
Mar 27, 2023
01:52 pm

செய்தி முன்னோட்டம்

புதுச்சேரி மாநில வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பாஜக பிரமுகரான அவர் தனது வீட்டின் அருகிலிருந்த பேக்கரியில் நின்றுகொண்டிருந்தபொழுது, மர்மநபர்கள் சிலர் அவர்மீது வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. கொலைசெய்யப்பட்ட செந்தில்குமார் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துச்சென்ற போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, கொலை செய்தவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த விவகாரம் குறித்து அறிந்த நமச்சிவாயமும் நேரில் சென்று பார்த்து அழுதுள்ளார். பின்னர் கொலையாளிகளை உடனடியாக பிடிக்க போலீசுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதற்கிடையே தற்போது கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்ற 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை - நீதிமன்றத்தில் 7 பேர் சரண்