டெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு
செய்தி முன்னோட்டம்
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இன்று காலை டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர்.
ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் தங்கி இருக்கும் சுனக், கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசம் போது, தன்னை தானே ஒரு "பெருமைமிக்க இந்து" என்று அழைத்து கொண்டார்.
மேலும், டெல்லியில் தங்கியிருக்கும் போது ஒரு இந்து கோவிலுக்குச் செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை தனது மனைவியுடன் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்ற சுனக், சுமார் ஒரு மணி நேரம் அந்த கோவிலில் செலவிட்டார்.
தகவ்க்ஜ்
'நான் ஒரு பெருமைமிக்க இந்து': பிரதமர் ரிஷி சுனக்
கோவிலுக்குள் வெறுங்காலுடன் அவர் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"அவரை சந்தித்த பிறகு, அவர் சனாதனத்துடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போல் உணர்ந்தோம்" என்று அக்ஷர்தாம் கோவிலின் இயக்குநர் ஜோதிந்திர டேவ் தெரிவித்துள்ளார்.
அவர்களின் வருகையை முன்னிட்டு கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும், கோவிலை சுற்றியுள்ள ரோடுகள் மறிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
"நான் ஒரு பெருமைமிக்க இந்து. அப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன். அப்படித்தான் நான் இருக்கிறேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் இங்கு இருக்கும் போது ஒரு கோவிலுக்கு செல்லலாம் என்று இருக்கிறேன்" என்று கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வந்திறங்கியதும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.