NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்
    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்
    இந்தியா

    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    April 24, 2023 | 03:17 pm 1 நிமிட வாசிப்பு
    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்
    WFI தலைவருக்கு எதிராக மொத்தம் ஏழு புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன

    வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக FIR கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிஜ் பூஷன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், இதே பிரச்சனைக்காக இந்த மல்யுத்த வீரர்கள் போராடினர். மூன்று மாதங்களுக்குப் பிறகு, WFIஐ சேர்ந்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில், குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் டெல்லி காவல்துறை அறிக்கையைக் கேட்டுள்ளது. WFI தலைவருக்கு எதிராக மொத்தம் ஏழு புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

    விடியவிடிய போராடிய விளையாட்டு வீரர்கள்

    "விசாரணையின் ஒரு பகுதியாக, WFI தலைவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவிடம் நாங்கள் அறிக்கையை கோரியுள்ளோம்." என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழு மத்திய அமைச்சகத்தால் ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது. மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடிய பிறகு, மத்திய அமைச்சகம் இந்த முடிவை எடுத்தது. இந்த குழு, WFIஇன் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டது. மேலும், பாஜக தலைவர் பிர்ஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுகளையும் இந்த குழு ஆராய்ந்தது. தேசிய விருது பெற்ற பல விளையாட்டு வீரர்கள், இந்த குழுவின் கண்டுபிடிப்புகளை வெளியிட வேண்டும் என்று கோரி ஜந்தர் மந்தரில் நேற்று விடியவிடிய போராடினர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    டெல்லி
    பாஜக

    இந்தியா

    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாப்
    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!  கடலூர்
    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!  பங்குச்சந்தை செய்திகள்
    5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து!  கொரோனா

    டெல்லி

    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    காலநிலை மாற்றம்: இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள்  இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    ஆராத்யா பச்சனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம் பாலிவுட்

    பாஜக

    மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி  இந்தியா
    முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக  தமிழ்நாடு
    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை இந்தியா
    கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்  கர்நாடகா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023