திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வரும் ஏப்ரல் 12ம் தேதி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில், அரசியல் அமைப்பு சட்டம் அங்கீகரிக்கும் மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட ஆளுநர் என்பதையே மறந்துவிட்டு பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். முதலிய அமைப்புகளின் பிரதிநிதியாக ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார்.
திருக்குறளுக்கு தவறான பொருளை சொல்லிவிட்டு திருக்குறளே தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று சொல்லி கொண்டார்.
42 உயிர்களை காவு வாங்கிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தற்போது வரை அவர் அனுமதியளிக்கவில்லை.
ஆனால் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளை மிக வெளிப்படையாக சந்தித்துள்ளார் என்று பல குற்றச்சாட்டுகள் அதில் கூறப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு
ஆளுநர் தேவையில்லை என்பதே நிலைப்பாடு என்று அறிக்கை
மேலும் அந்த அறிக்கையில், தமிழக ஆளுநர் கூடங்குளம், ஸ்டர்லைட் உள்ளிட்ட போராட்டங்கள் அந்நிய நாடுகளின் நிதியால் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.
இது தமிழக மக்களை கொச்சைப்படுத்துவது ஆகும். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இப்போராட்டங்கள் குறித்து அவர் அவதூறாக பேசி வருகிறார்.
ஸ்டர்லைட் போராட்டத்தில் 13 உயிர்கள் துடிக்க துடிக்க சுட்டுக்கொல்லப்பட்டதும், ஆன்லைன் சூதாட்டத்தில் 43 உயிர் போனாலும் தனக்கு கவலையில்லை என்று கூறும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை என்பதே எங்களது இறுதியான நிலைபாடு ஆகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 12ம் தேதி மாலை 4 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.