
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம்
செய்தி முன்னோட்டம்
கடந்த 2018ம்ஆண்டு நாட்டையே உலுக்கிய ஓர் சம்பவம் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.
இந்தப்போராட்டத்தில் 13பேர் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
போராட்டத்தினிடையே சமூகவிரோதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஒருபக்கம் கூறப்பட்டது.
மறுபுறம் போராட்டத்தில் சமூக விரோதிகளை சுடும்நோக்கிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக ஆளுநர் ரவி அவர்கள், நாட்டின் காப்பர் தேவையில் 40%நிறைவேற்றிய ஆலை தான் இந்த ஸ்டெர்லைட் ஆலை.
இதற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆலையினை மூடவைத்துவிட்டார்கள்.
வெளிநாடுகளில் இருந்துவரும் நிதிகள் நமது நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதற்கு திமுக எம்பி.கனிமொழி, மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரின் பேச்சை கண்டிக்கிறேன்.
அவரது பேச்சுக்கான ஆதாரங்களை அவர் தரவேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு
#BREAKING | ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி - ஆளுநர் ரவி சர்ச்சை பேச்சு!#SunNews | #SterliteProtest | #GovernorRNRavi pic.twitter.com/EirBGqrKNV
— Sun News (@sunnewstamil) April 6, 2023