Page Loader
பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு
பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடதப்பட்டன.

பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு

எழுதியவர் Sindhuja SM
May 03, 2023
04:12 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்க இயக்குனரகம் இன்று(மே 3) சோதனை நடத்தியது. பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடதப்பட்டன. இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) வழிகாட்டுதல்களை மீறி ரூ.150 கோடிக்கு மேல் பொது டெபாசிட்களை வசூலித்ததாக மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

DETAILS

பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளை செய்ததா மணப்புரம் பைனான்ஸ்?

திருச்சூரில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகம், அதன் விளம்பரதாரர்களின் அலுவலகங்கள் உட்பட மொத்தம் நான்கு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு உடனடி பதில் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்நிறுவனம் "பெரிய அளவிலான" பண பரிவர்த்தனைகளை செய்ததாக அமலாக்க இயக்குனரகம் சந்தேகிக்கிறது. எனவே, இது குறித்த தகவல்களை சேகரிக்க அமலாக்க இயக்குனரகம் இந்த சோதனையை தொடங்கியுள்ளது.