Page Loader
அரசியல் சாசன புத்தகத்துடன் ராகுலின் பாணியில் எம்.பி.,யாக பதவியேற்றுக்கொண்டார் பிரியங்கா காந்தி
பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரியங்கா காந்தி அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்திருந்தார்

அரசியல் சாசன புத்தகத்துடன் ராகுலின் பாணியில் எம்.பி.,யாக பதவியேற்றுக்கொண்டார் பிரியங்கா காந்தி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 28, 2024
01:03 pm

செய்தி முன்னோட்டம்

இன்று காலை பிரியங்கா காந்தி, வயநாடு எம்.பி.,யாக பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், அவர் அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்திருந்தார். இது ராகுல் காந்தி சமீபத்தில் MPயாக பதவியேற்ற போது கடைபிடித்த அதே பணியாகும். MPயாக பதவியேற்ற பிரியங்கா காந்திக்கு அவையிலிருந்த அவரது கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலியை தேர்வு செய்ததால், வயநாடு தொகுதி காலியாகி, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் முதன்முறையாக, பிரியங்கா போட்டியிட்டு 6,22,338 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 4,10,931 ஓட்டுகளின் வித்தியாசத்தில் அவர் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post