
தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் ஏப்ரல் மாத இறுதியில் கோடை விடுமுறை துவங்கி விடும்.
மேலும் தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் நேற்று(ஏப்ரல்,13) மாலை முதல் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த கூட்ட நெரிசல் மற்றும் விடுமுறை தினங்கள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு போக்குவரத்து கழகங்களில் இருந்து கூடுதலாக 1000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து எங்கு செல்லவேண்டுமானாலும் ஆம்னி பேருந்துகளில் குறைந்தது ரூ.1,500 கட்டணம்தான் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
பேருந்து
ஆம்னி பேருந்துகள் செய்யும் அட்டூழியம்
ஆம்னி பேருந்துகள் வழக்கத்தை விட 50 முதல் 80 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இவ்வாறு கூடுதல் கட்டணம் வாங்கக்கூடாது என்று தமிழக அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இதற்கான தீர்வு ஏற்படவில்லை.
நேற்றைய தினம் கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிறுத்தங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து அதிகாரிகள் யாரும் இருக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது.
மேலும் ஆம்னி பேருந்துகளில் வழியில் வரும் நிறுத்தங்களில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுக்கிறார்கள் என்னும் புது தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
இதனால் பலரும் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள். அதுவும் சென்னையை விட்டு வெளியேறும் வரை கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது.