12ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகள்
இன்று காலை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் +2 தேர்வு எழுதிய 7 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்களில், 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் 91.02% தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49% தேர்ச்சியும், தனியார் பள்ளிகள் 98.70% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். மேலும் அதிகளவு தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களில், திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், சிறை கைதிகள் சிலரும் +2 தேர்வு எழுதியுள்ளனர். அதில், மதுரை மத்திய சிறையில் பொது தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சேலம் சிறையில் தேர்வு எழுதிய சிறைகைதிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100% தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகள்
#NewsUpdate | பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற சேலம் மத்திய சிறைச்சாலை தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் பரிசுப் பொருட்கள் வழங்கி பாராட்டு#SunNews | #12thExamResult | #Salem https://t.co/fusqI43hRE pic.twitter.com/ZSIalmnRY9— Sun News (@sunnewstamil) May 6, 2024