வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி
வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மோடி, 6,12,970 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகளும் பெற்றனர். இன்றைய நிலவரப்படி, பாஜக, காங்கிரஸிற்கு அடுத்ததாக பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் (பிஎஸ்பி) அதர் ஜமால் லாரி 33,766 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, முறையே 56.37% மற்றும் 63.62% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாரணாசியும் ஒன்று. 2014 தேர்தலில், பிரதமர் மோடி, ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவாலை 3,71,784 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.