Page Loader
தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை
தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

எழுதியவர் Nivetha P
Mar 15, 2023
07:08 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டம் 1,501 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும். இங்கு காவேரி வடக்கு மற்றும் தெற்கு சரணாலயங்கள் அமைந்துள்ளன. அதில் யானைகள், காட்டு எருமைகள், கரடிகள், சிறுத்தைகள், மயில்கள் போன்ற பல வனவிலங்குகள் உள்ளன. அதன்படி கோடைகாலங்களில் தண்ணீர் தேடி கர்நாடகா பன்னர் கட்டாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம்பெயர்வது வழக்கம். கடந்தாண்டு இவ்வாறு வந்த 100க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல் குழுவாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் சென்று சேதப்படுத்தின.

தண்ணீர் தொட்டி நிரப்புதல்

வனவிலங்குகளை தடுக்கும் பணியில் ஈடுபாடு

அவை அனைத்தையும் வனத்துறையினர் ஒன்று சேர்த்து கடந்த மாதம் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு இடம்பெயர செய்தனர். இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்கும் முன்னரே, வனத்தில் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால் யானைகள் போன்ற காட்டு விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வர அதிக வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் கசிவு நீர் குட்டை, ஆழ்துளை கிணறுகள், தீவனப்புல் தோட்டம் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வனப்பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் குட்டைகளில் இப்போதே நீர் குறைய துவங்கியுள்ளது என கூறப்படுகிறது.