பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார்
கர்நாடக எம்.பி.யும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான பாலியல் புகார்களுக்கு மத்தியில் கடந்த மாதம் இந்தியாவை விட்டு ஜெர்மனிக்கு தப்பி ஓடினார். இந்நிலையில், அவர் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். மே 31 அன்று சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் ஆஜராவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, "என்னை தவறாக நினைக்காதீர்கள், மே 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு, நான் எஸ்ஐடி முன் ஆஜராவேன். நான் விசாரணைக்கு ஒத்துழைப்பேன், நான் நீதித்துறையை நம்புகிறேன். இவை என் மீதான பொய் வழக்குகள். நான் சட்டத்தை நம்புகிறேன்." என்று கூறியுள்ளார்.
"அரசியல் சதி": தன் மீது சுமத்தப்பட்ட ku 7
ஹசன் தொகுதி எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். அவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோக்கள் வெளிவந்ததை அடுத்து ஏப்ரல் 26ஆம் தேதி அவர் நாட்டை விட்டு வெளியேறினார். பிரஜ்வல் ரேவண்ணா இந்த குற்றச்சாட்டுகளை "அரசியல் சதி" என்று விவரித்துள்ளார். மேலும், தான் "மனச்சோர்வு மற்றும் தனிமையில்" இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் இருக்கும் இடத்தைத் வெளியே சொல்லதற்காக அவர் தனது குடும்பத்தினரிடமும், கட்சித் தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் தனது வழக்கைப் பற்றி பகிரங்கமாகப் பேசினர் என்று கூறிய அவர் "இது ஒரு அரசியல் சதி" என்று குறிப்பிட்டுள்ளார்.