செக்ஸ் டேப் வழக்கில் தேடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது
செய்தி முன்னோட்டம்
செக்ஸ் டேப் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பினார்.
அவரை பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்த அதிகாரிகள் விசாரணைக்கு CID அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) காவலில் எடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, செக்ஸ் டேப்புகள் வெளியானதும் இராஜதந்திர பாஸ்போர்ட் மூலமாக ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தார்.
ஹாசன் மக்களவைத் தொகுதியில் NDA வேட்பாளராகப் போட்டியிட்ட பிரஜ்வல், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் பல வீடியோக்கள் வெளியானதும் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
பிரஜ்வல் ரேவண்ணா கைது
#BREAKING | நாட்டை உலுக்கிய பாலியல் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா #SunNews | #BengaluruAirport | #PrajwalRevanna pic.twitter.com/k3j9iMYm1f
— Sun News (@sunnewstamil) May 31, 2024