உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (பிப்ரவரி 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தஞ்சாவூர்: கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு, பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், அய்யம்பேட்டை, மேலட்டூர்
திருப்பூர்: ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், கொங்கு நகர், ஈஆர்பி நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்ட புரம், எஸ்வி காலனி, கொங்கு பிரதான சாலை, பண்டிட் நகர், விஓசி நகர், டிஎஸ்ஆர் லேஅவுட், முத்துநகர்
நாகப்பட்டினம்: ஆச்சல்புரம், கொள்ளிடம், மகேந்திரப்பள்ளி
பல்லடம்: கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய், தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்காளிபாளையம்