LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 22, 2026
08:08 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- உடுமலைப்பேட்டை: பூளவாடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி மற்றும் சுங்கரமடகு ஆகிய பகுதிகள்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல்: சத்திரப்பட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி ஆகிய பகுதிகள். கோவிலூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி ஆகிய பகுதிகள். சின்னலுப்பை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட குஜிலியம்பாறை பகுதி. வள்ளிப்பட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை ஆகிய பகுதிகள். தேனி: காமாட்சிபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள். கடமலைக்குண்டு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Advertisement