Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை (டிசம்பர் 30) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Dec 29, 2024
04:58 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 30) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- செங்கல்பட்டு : 110/33-11KV/மாம்பாக்கம். சென்னை வடக்கு : டவுன் பொன்னேரி வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம். தேனி : தப்புக்குண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு : அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம் மற்றும் கே.ஏ.எஸ். இண்டஸ்ட்ரீஸ். நாமக்கல் : புதன்சந்தை, நாமகிரிப்பேட்டை. பெரம்பலூர் : காரை ஃபீடர், ஈரூர் ஃபீடர், ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி, பெரியத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான். புதுக்கோட்டை : மலையூர் பகுதி முழுவதும். சிவகங்கை : கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர். தஞ்சாவூர் : அதிராம்பட்டினம், ராஜமடம். திருவாரூர் : நெய்வாசல், பனையக்கோட்டை, மூவர்கோட்டை, சோனாப்பேட்டை.