
மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் ஆட்சியில் அதிக மின்வெட்டு இருந்ததால் தான் மக்கள் தொகை அதிகரித்தது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று(மார் 9) பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அங்கு போட்டியிடும் பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற காட்சிகள் நிறைய வாக்குறுதிகளை வாரி வழங்கி கொண்டிருக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் நடத்திய மாநிலம் தழுவிய பேருந்து பயணமான பிரஜா த்வனி யாத்திரையின் போது கர்நாடக மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
இந்தியா
" குறைந்த மின்சாரம் = அதிக குழந்தைகள்": முட்டாள்த்தனமானது என்கிறது காங்கிரஸ்
இது குறித்து கர்நாடக மாநிலம் ஹஸ்சன் மாவட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சர்ச்சை குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
"கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இலவச மின்சாரம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கூறி இருக்கிறது. அவர்கள் இலவச மின்சாரம் வழங்குவார்கள் என்பதை நம்புகிறீர்களா? பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போதிய அளவிலான மின்சாரம் வழங்கபடவே இல்லை. அதனால் தான் மக்கள் தொகை அதிகரித்தது." என்று அவர் கூறியுள்ளார்.
இந்த உரையை முட்டாளத்தானது என்றும் வினோதமானது என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.