Page Loader
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து

எழுதியவர் Sekar Chinnappan
Jan 14, 2025
09:30 am

செய்தி முன்னோட்டம்

அறுவடை மற்றும் விவசாய பாரம்பரியத்தை போற்றும் பண்டிகையான தைப் பொங்கலை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். புதிய ஆடைகளை அணிந்து, குடும்பங்கள் பாரம்பரிய பொங்கல் தயார் செய்து, அன்பானவர்களுடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி திங்கட்கிழமை (ஜனவரி 13) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என மேலும் குறிப்பிட்டுளளார்.

முதல்வர் வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து பதிவில், "உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!" எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் மோடி வாழ்த்து

ட்விட்டர் அஞ்சல்

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து