3ஆம் கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.19% மக்கள் வாக்குப்பதிவு
செய்தி முன்னோட்டம்
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது.
மிகவும் அமைதியாக நடந்த வாக்குப்பதிவுக்கு மத்தியில், மாலை 5:00 மணி வரை 60.19% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஏழு சுற்று மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குபதிவில் 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற அசாம், கோவா மற்றும் மேற்கு வங்கத்தில் பிற்பகல் 3:00 மணி வரை முறையே 63.08%, 61.39% மற்றும் 63.11% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 94 தொகுதிகள் வாக்களிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குஜராத்தில் உள்ள சூரத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா
பாதிக்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவு
மேலும், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இரண்டாம் கட்டமாக நடைபெறவிருந்த மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதியிலும் மூன்றாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்றைய வாக்குப்பதிவுடன் நாடாளுமன்றத்தில் இருக்கும் 543 தொகுதிகளுள் பாதிக்கும் மேற்பட்டவற்றில் வாக்குப்பதிவு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, நாடு ஏற்கனவே ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டது என்று அர்த்தம் கொள்ளலாம்.
அசாம்(4 இடங்கள்), பீகார்(5), சத்தீஸ்கர்(7), தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ(2), கோவா(2), குஜராத்(25), கர்நாடகா(14), மத்தியப் பிரதேசம்(9), மகாராஷ்டிரா(11), உத்தரப் பிரதேசம்(10), மேற்கு வங்காளம்(4) ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.