
ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியில் உள்ள ஆசிப் நகர் காவல் நிலையத்தில் விஷால்(24) என்பவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.
இவர் மொரட்பள்ளி என்னும் பகுதியில் உள்ள ஜிம்மில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்வதற்காக சென்று பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அப்போது இரவு 8 மணியளவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த விஷால் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு கீழே சுருண்டு விழுந்துள்ளார்.
அருகில் இருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜிம்மில் விஷால் மயக்கம் போட்டு விழும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக தற்போது பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள்
Watch CCTV Footage 👇
— Arbaaz The Great (@ArbaazTheGreat1) February 23, 2023
He died at gym due to heart attack. pic.twitter.com/FbA6hghS4E