3வது முறையாக பிரதமர் ஆன நரேந்திர மோடியின் முதல் உத்தரவு என்ன தெரியுமா?
பிரதமர் கிசான் நிதியின் 17 வது தவணையை வெளியிட உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடியின் முதல் உத்தரவு இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் பிரதமராக அரியணை ஏறினார். அதன் பிறகு அவர் பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். சுமார் 20,000 கோடி ரூபாய் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பில் கையெழுத்திட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளின் நலனுக்காக தனது அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மூன்றாவது முறையாக அரியணை ஏறினார் பிரதமர் மோடி
முதல் உத்தரவை விவசாயிகளுக்காக பிறப்பித்த பாஜக அரசு
"எங்களுடையது கிசான் கல்யாணுக்கு(விவசாயி நலன்) முழு அர்ப்பணிப்புள்ள அரசாகும். எனவே பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பது பொருத்தமானது. விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக நாங்கள் இன்னும் அதிகமாக பணியாற்ற விரும்புகிறோம்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடியின் கடந்த பதவிக்காலத்தின் போது மூன்று விவசாயச் சட்டங்களை வலியுறுத்தி விவசாயிகள் பெரும் கிளர்ச்சியை செய்தனர். குறைந்தபட்ச ஆதரவு விலை(எம்எஸ்பி) குறித்த மத்திய அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் சில விவசாய சங்கங்கள் இன்னும் அதிருப்தியில் உள்ளன. அதனால், முதல் உத்தரவை விவசாயிகளுக்காக பிறப்பித்து அவர்களை பாஜக அரசு சமாதானம் செய்ய முயல்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.