அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம் இன்று: இதன் முக்கியத்துவம் என்ன?
செய்தி முன்னோட்டம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்ததை அறிவிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 25) 'துவஜாரோஹணம்' (கொடியேற்றம்) நிகழ்வு கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, 161 அடி உயர கொடிக்கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றவுள்ளார். 'துவஜாரோஹணம்' சடங்கு என்பது ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் முறையாக முழுமையடைந்துவிட்டதை குறிக்கும் அறிவிப்பாகும். இந்த சடங்கின் மூலம், கோவில் வெறும் கட்டுமான தளத்தில் இருந்து, ராமரின் முழுமையான தெய்வீக இருப்பிடமாக மாறியது என பிரகடனப்படுத்துவதாகும். இந்தச் சடங்கிற்குப் பிறகு, கோவிலின் அனைத்து 44 கதவுகளும் வழிபாடுகளுக்காகவும் சடங்குகளுக்காகவும் திறக்கப்படுகின்றன.
வித்தியாசம்
பிராண பிரதிஷ்டை vs துவஜாரோஹணம்
முன்னதாக இந்த கோவிலில் பிராண பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22, 2024 நடைபெற்றது. இது கருவறைக்குள் ராம் லல்லா சிலையினை நிறுவி, வழிபாட்டை தொடங்கிய முதல் சடங்காகும். தற்போது நடைபெறவுள்ள துவஜாரோஹணம் என்பது கோவிலின் கட்டமைப்பு முழுமையையும், அதன் இறையாண்மையையும் பொதுமக்களுக்கு பறைசாற்றும் ஒரு பிரகடன சடங்கு ஆகும்.
கொடி
கொடியில் உள்ள புனித சின்னங்கள்
பிரதமர் மோடி ஏற்றவுள்ள 22 அடி நீளம், 11 அடி அகலம் கொண்ட காவிக் கொடியில், தங்க நூலால் கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட மூன்று புனித சின்னங்கள் இடம்பெற்றுள்ளன: சூரியன்: ஸ்ரீராமரின் சூர்ய வம்சம் மற்றும் நிலையான ஆற்றலை குறிக்கிறது. ஓம்: ஆன்மீக அதிர்வலைகளைக் குறிக்கும் ஓம்காரம். கோவிதா மரத்தின் உருவங்கள்: தூய்மை, செழிப்பு மற்றும் "ராம ராஜ்யத்தை" குறிக்கின்றன. இந்த 11 கிலோ எடையுள்ள கொடி, குஜராத்தில் உள்ள ஒரு சிறப்பு பாராசூட் தயாரிப்பு நிறுவனத்தால், உறுதியான பாராசூட் தரத் துணியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் காற்று, மழை மற்றும் சூரிய ஒளியை தாங்கும் திறன் கொண்டது.
பாதுகாப்பு
பிரதமர் வருகையை ஒட்டி பலப்படுத்தப்பட்டு பாதுகாப்பு
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ATS, NSG ஸ்னைப்பர்கள், சைபர் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் உட்பட மொத்தம் 6,970 பாதுகாப்புப் பணியாளர்கள் நகரத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளும் செயல்பாட்டில் உள்ளன. கூட்டத்தை நிர்வகித்தல், பாதுகாப்புத் திரையிடல், வெடிபொருட்களைக் கண்டறிதல் மற்றும் அவசரகால பதில் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டுப் படைகள், நாய் படைகள், விவிஐபி பாதுகாப்பு குழுக்கள், தீயணைப்புப் படைகள் மற்றும் விரைவு நடவடிக்கை குழுக்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகள் நகரத்தில் தீவிரமாக உள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.