தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி ஆகஸ்ட்-31 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார். அதன்படி, நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகள் துவக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:'சென்னை - நாகர்கோவில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை, பெங்களூரு - மதுரை செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வரும் 31-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்'. இதற்கான ஏற்பாடுகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்து வருகிறது.