LOADING...
பிரதமர் மோடி காதில் கடுக்கன் அணிந்துள்ளாரா? ஓமன் பயண வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை
பிரதமர் மோடி காதில் கடுக்கன் அணிந்துள்ளாரா?

பிரதமர் மோடி காதில் கடுக்கன் அணிந்துள்ளாரா? ஓமன் பயண வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை

எழுதியவர் Venkatalakshmi V
Dec 19, 2025
01:43 pm

செய்தி முன்னோட்டம்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், அவரது இடது காதில் மின்னும் ஒரு பொருள் கடுக்கன் போலத் தெரிந்தது. இது மோடியின் புதிய ஃபேஷனா அல்லது பாரம்பரிய மாற்றமா எனப் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பினர். இந்த வைரல் வீடியோ குறித்த ஆய்வில், பிரதமர் மோடி அணிந்திருப்பது கடுக்கன் அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

உண்மை

பிரதமர் காதில் அணிந்திருப்பது அதிநவீன கருவி 

பிரதமர் மோடி காதில் அணிந்திருந்தது அதிநவீன 'ரியல்-டைம் டிரான்ஸ்லேஷன்' (Real-time Translation) கருவியாகும். ஓமன் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி அரபிக் (Arabic). உயர்நிலை ராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் போது, எதிர்தரப்பினர் பேசும் மொழியை உடனுக்குடன் புரிந்து கொள்ள இத்தகைய கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement

முக்கியத்துவம்

பயணத்தின் முக்கியத்துவம்

பிரதமர் மோடியின் ஓமன் பயணம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியா - ஓமன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இந்தியாவின் 98% ஏற்றுமதி பொருட்களுக்கு ஓமனில் வரி விலக்கு கிடைக்கும். இந்தியா - ஓமன் உறவை வலுப்படுத்தியதற்காக, ஓமனின் மிக உயரிய சிவிலியன் விருதான 'ஆர்டர் ஆஃப் ஓமன்' (Order of Oman) மோடிக்கு வழங்கப்பட்டது.

Advertisement