
சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரை
செய்தி முன்னோட்டம்
சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, நான் தமிழக மக்களையும், சென்னையையும், தமிழ் மொழி, பாரம்பரியத்தை மிகவும் விரும்புகிறேன் என்று கூறினார்.
மேலும் விவேகானந்தர் இல்லத்தினை காணக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.
இப்பொது விவேகானந்தர் இருந்திருந்தால் தற்போதைய இந்தியாவை கண்டு பெருமைப்பட்டிருப்பார்.
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சியில் ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று உரையாற்றியுள்ளார்.
இந்தியா நாட்டில் தற்போது பெண்கள் மிக நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி
#JUSTIN ராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 8, 2023
#PMModiInTamilnadu #NarendraModi #News18TamilNadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/lEVl3Rtj26