அடுத்த செய்திக் கட்டுரை
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
எழுதியவர்
Sindhuja SM
May 05, 2024
08:12 pm
செய்தி முன்னோட்டம்
ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேசத்தின் புனித நகரமான அயோத்திக்கு சென்றடைந்தார்.
பிரதமர் ராமர் கோவிலுக்கு சென்று பூஜை செய்தார்.
அக்கோவிலின் குடமுழுக்கு விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
ராமர் கோவிலில் பூஜை செய்த பிறகு, சுக்ரீவா கோட்டையில் இருந்து தொடங்கி லதா சௌக் வரையில் பிரதமர் மோடி அந்த நகரில் இரண்டு கிலோமீட்டர் வரை ரோட்ஷோ நடத்தினார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, அயோத்தி நகரம் முழுவதும் பிரதமர் மோடி மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவப்படங்கள் கட்அவுட்களாக வைக்கப்பட்டிருந்தன.
ட்விட்டர் அஞ்சல்
ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
PM Modi takes blessings of Lord Ram in Ayodhya. pic.twitter.com/Kw9cKUyDml
— News Arena India (@NewsArenaIndia) May 5, 2024