NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டொனால்ட் டிரம்பின் சமூக வலைதளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி;  ட்ரூத் சோஷியல் என்பது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    டொனால்ட் டிரம்பின் சமூக வலைதளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி;  ட்ரூத் சோஷியல் என்பது என்ன?
    டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் இணைந்தார் பிரதமர் மோடி

    டொனால்ட் டிரம்பின் சமூக வலைதளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி;  ட்ரூத் சோஷியல் என்பது என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 20, 2025
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுவிய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இணைந்துள்ளார்.

    தளத்தில் இணைந்த பிறகு அவர் வெளியிட்டுள்ள முதல் பதிவில், 2019 ஹூஸ்டன் வருகையின் போது டிரம்புடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டது.

    தனது கணக்கைத் தொடங்கிய உடனேயே, மோடி டிரம்ப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜான்டி வான்ஸைப் பின்தொடர்ந்தார்.

    சில மணி நேரங்களுக்குள், அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.

    தளத்தில் மோடி இடம்பெறும் பாட்காஸ்ட் வீடியோவையும் டிரம்ப் பகிர்ந்து கொண்டார். தற்போது வரை, ட்ரூத் சோஷியலில் உள்ள ஒரே முக்கிய உலகத் தலைவராக மோடி மட்டுமே உள்ளார்.

    ட்ரூத் சோஷியல்

    ட்ரூத் சோஷியல் தொடக்கம்

    2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற முக்கிய சமூக ஊடக தளங்களில் இருந்து டொனால்ட் டிரம்ப் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2022 இல் ட்ரூத் சோஷியல் தொடங்கப்பட்டது.

    இந்த தளம் சுதந்திரமான கருத்துப் பகிர்வுக்கான மாற்று இடமாக செயல்படுகிறது. இந்த தளம் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்திற்குச் சொந்தமானது.

    டிரம்ப் சுமார் 57 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். மீதமுள்ள பங்குகளை ஏஆர்சி குளோபல் இன்வெஸ்ட்மென்ட் உள்ளிட்ட பிற முதலீட்டாளர்கள் வைத்திருக்கிறார்கள்.

    ட்ரூத் சோஷியல் தற்போது சுமார் 9.2 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, டிரம்ப் தனியாக எக்ஸ் தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    டொனால்ட் டிரம்ப்
    சமூக ஊடகம்

    சமீபத்திய

    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா

    பிரதமர் மோடி

    பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சொல்கிறாரா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல் டொனால்ட் டிரம்ப்
    பொருளாதா வளர்ச்சியை அதிகரிக்கும் யூனியன் பட்ஜெட் 2025; பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு பட்ஜெட் 2025
    அமெரிக்க அதிபர் டிரம்பை பிப்ரவரி 13ஆம் தேதி சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி அமெரிக்கா
    மகா கும்பமேளா: பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார் மகா கும்பமேளா

    நரேந்திர மோடி

    குவைத் எமிர் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு குவைத்
    ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் ஓய்வு; கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அஸ்வின் ரவிச்சந்திரன்
    இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது பிரதமர் மோடி
    'வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என நம்புகிறேன்': வைரலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு! மன்மோகன் சிங்

    டொனால்ட் டிரம்ப்

    இந்திய பிரதமர் மோடி எப்படிப்பட்டவர்? டொனால்ட் டிரம்ப் கூறிய அந்த வார்த்தைகள் பிரதமர் மோடி
    பங்களாதேஷை பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார்; செய்தியாளர் கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் பதில் பங்களாதேஷ்
    டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்புகள் அமெரிக்கா
    ராணுவத்தில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான தடை உத்தரவை அமல்படுத்தியது அமெரிக்க ராணுவம் அமெரிக்கா

    சமூக ஊடகம்

    திரிஷா குறித்து சர்ச்சை கருத்து: மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க நடிகர் சங்கம் வலியுறுத்தல் நடிகர் சங்கம்
    டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார் டீப்ஃபேக்
    பள்ளிக்கு வெளியே குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அய்ர்லாந்தில் வெடித்த வன்முறை காவல்துறை
    ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட் டீப்ஃபேக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025