LOADING...
அசாமில் பிரம்மாண்டம்: இந்தியாவின் முதல் இயற்கையுடன் இணைந்த விமான நிலைய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்தார்
இந்தியாவின் முதல் இயற்கையுடன் இணைந்த விமான நிலைய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்தார்

அசாமில் பிரம்மாண்டம்: இந்தியாவின் முதல் இயற்கையுடன் இணைந்த விமான நிலைய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்தார்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 20, 2025
05:59 pm

செய்தி முன்னோட்டம்

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தின் (LGBIA) புதிய முனையக் கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 20) திறந்து வைத்தார். சுமார் 4,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த முனையம், இந்தியாவின் முதல் இயற்கையை மையமாகக் கொண்ட (Nature-themed) விமான நிலைய முனையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

வடிவமைப்பு

கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு

அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம், அசாமின் பாரம்பரிய மூங்கில் வேலைப்பாடுகள் மற்றும் ஆர்க்கிட் மலர்களின் வடிவங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 1.3 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த முனையம், வடகிழக்கு பிராந்தியத்தின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுத்துள்ளது. முன்னதாக, விமான நிலையத்திற்கு வெளியே நிறுவப்பட்டுள்ள அசாமின் முதல் முதலமைச்சர் கோபிநாத் பர்டோலோயின் 80 அடி உயரச் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.

மேம்பாடு

பொருளாதார மற்றும் சுற்றுலா மேம்பாடு

இந்த புதிய விமான நிலைய முனையம் வடகிழக்கு இந்தியாவைத் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கும் முக்கிய வான்வழி மையமாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய உள்கட்டமைப்பு வசதி, அசாமின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். விழாவில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement