வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
பதிவு
'எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடி பதிவு
இது குறித்துத் தனது சமூக ஊடகப் பக்கமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை இலக்கு என வலியுறுத்தியுள்ளார்.
"நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை! வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்."
"இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நமது இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது."
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Nothing is more important than the welfare and future of our youth!
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…
குற்றச்சாட்டு
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு
கடந்த 10 ஆண்டுகளில் பதிவான 152 வினாத்தாள் கசிவு வழக்குகளில் ஒருவருக்குக் கூட இதுவரை தண்டனை பெற்றுத்தரப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றபோது, காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த அடக்குமுறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.