முதல்வரின் ஸ்பெயின் பயணம்; துணை முதல்வராக உதயநிதி நியமனமா?
செய்தி முன்னோட்டம்
திமுக தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் பரவி வருகின்றன.
இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அப்போது, முதலமைச்சர் பணிகளை மேற்கொள்வதற்காக, உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையின் சார்பில், துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும் ஜனவரி 21-ம் தேதி சேலத்தில் நடைபெறும் கட்சியின் இளைஞர் அணிக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த பதவி உயர்வு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
card 2
வதந்தி என மறுக்கும் உதய்
தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டி, அரசு முறை பயணமாக, முதலைமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் செல்ல உள்ளார்.
இந்த அறிவிப்பை, நேற்று நடைபெற்ற முதலீட்டார்களின் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, தொழில்துறை அமைச்சர் TRB ராஜா அறிவித்தார்.
ஸ்பெயின் நாட்டை தொடர்ந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளுக்கு செல்லவும் முதலைமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் அப்போது ராஜா கூறினார்.
இதனால், துணை முதல்வர் பதவிக்கான தேவை ஏற்பட்டுள்ளது. இது பற்றி, திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், கட்சி வளர்ச்சியிலும், அரசு நிர்வாகத்திலும் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஈடுபாட்டை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும் துணை முதல்வர் விவகாரத்தில், ஸ்டாலினின் முடிவே இறுதியானது என அவர் கூறியுள்ளார்.
மறுபுறம், உதயநிதி,"இது வெறும் வதந்தி" என கூறியுள்ளார்.