
சென்னையில் 'பிங்க் ஆட்டோக்கள்' திட்டம்; பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
'பிங்க் ஆட்டோக்கள்' திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க் ஆட்டோக்கள்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,"தமிழக அரசு பெண்களின் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு புதிய மகளிர் நலத் திட்டங்கள் உள்ளன".
"அதேபோல், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த 'பிங்க் ஆட்டோக்களை' அறிமுகப்படுத்துவதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன"
தகவல்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
அவசர காலங்களில் புகார்களை விரைவாக ஏற்ப்படுத்த காவல் உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும்.
இதற்கு ஓட்டுநர் தகுதிகள்:
பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை.
25 வயதுக்கு முந்தையவர்கள்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் வேண்டும்.
சென்னையில் குடியிருக்க வேண்டும். சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு 1 லட்சம் ரூபாயும், CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கப்படும்.
ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும்.
தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை சென்னையின் சமூக நல அலுவலருக்கு 23.11.2024-க்குள் அனுப்ப வேண்டும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | சென்னையில் Pink Auto திட்டத்தில் பெண்கள் விண்ணப்பிக்க சமூக நலத்துறை அழைப்பு!#SunNews | #PinkAuto | #Chennai pic.twitter.com/ldfoYM8uWr
— Sun News (@sunnewstamil) October 22, 2024