Page Loader
அடுத்தாண்டு ஜனவரி 26க்குள் அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் தரிசிக்கலாம்
அயோதியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் புகைப்படம்(ஃபைல் புகைப்படம்)

அடுத்தாண்டு ஜனவரி 26க்குள் அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் தரிசிக்கலாம்

எழுதியவர் Srinath r
Sep 27, 2023
06:44 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ஆம் ஆண்டு, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், பக்தர்கள் குழந்தை ராமரை தரிசிக்கலாமென தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அயோத்தி ராமர் கோவில் கட்டுமான குழுவின் தலைவர், நிருபேந்திர மிஸ்ரா கூறியிருப்பதாவது: "அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதிக்குள், அயோத்தி கோவிலில், மக்கள் குழந்தை ராமரை தரிசிக்கலாம் என ஏஎன்ஐ(ANI) மூலம் மக்களுக்கு சொல்வது பாதுகாப்பாக இருக்கும் என நினைக்கிறேன்" "என்னால் சரியான தேதியை உங்களுக்கு சொல்ல முடியாது, ஏனெனில் கும்பாபிஷேக தேதி மாறுதலுக்குட்பட்டது. அது பிரதமர் மோடி பங்கேற்பதை பொருத்தது" எனக் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

ஏஎன்ஐ செய்தி முகமைக்கு நிருபேந்திர மிஸ்ரா அளித்த பேட்டி