அடுத்த செய்திக் கட்டுரை

படங்கள்: லடாக்கில் 'பைக் ரைடு' செய்த ராகுல் காந்தி
எழுதியவர்
Sindhuja SM
Aug 19, 2023
03:08 pm
செய்தி முன்னோட்டம்
லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று(ஆகஸ்ட் 19) பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்றார்.
ராகுல் காந்தி பைக் ஓட்டும் படங்களை காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. சில புகைப்படங்களை ராகுல் காந்தியும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, "பாங்காங் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறோம். இது உலகின் மிக அழகான இடங்களில் ஒன்று என்று என் தந்தை சொல்லி இருக்கிறார்" என கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று பாங்காங் ஏரியில் வைத்து, ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளுக்கு பூஜை செய்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.