
ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
செப்டம்பர் 30ம்தேதிக்குள் வங்கிகளில் அந்த நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல், பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட்கள் எடுக்கவும், பெட்ரோல்பங்க் உள்ளிட்டவைகளில் ரூ.2,000நோட்டுக்கள் வாங்கிக்கொள்ளப்படும் என்றே கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்,உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெட்ரோல் பங்க்'கில் இருசக்கரவாகனத்தில் சென்ற ஒருவர் பெட்ரோல் போட்டுள்ளார்.
பெட்ரோல் போட்டப்பின்னர் அவர் ரூ.2,000நோட்டினை எடுத்து நீட்டியுள்ளார்.
ஆனால் அந்த நோட்டை பெட்ரோல்பங்க் ஊழியர் வாங்க மறுத்து வேறு நோட்டினை தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர் தன்னிடம் வேறுநோட்டு இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் போடப்பட்ட பெட்ரோலினை அந்த ஊழியர் வண்டியிலிருந்து உறிஞ்சி எடுத்துள்ளார்.
இவ்வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | பெட்ரோல் நிரப்பியப்பின் ₹2000-ஐ நீட்டிய நபர்; ₹2000-ஐ வாங்க மறுத்து, நிரப்பிய பெட்ரோலை மீண்டும் உறிஞ்சி எடுத்த பங்க் ஊழியர்!#SunNews | #UttarPradesh | ##2000RupeesNote pic.twitter.com/g9JBgZTQea
— Sun News (@sunnewstamil) May 23, 2023