LOADING...
அதே கோர்ட்..புதிய முகம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார் பேரறிவாளன்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார் பேரறிவாளன்

அதே கோர்ட்..புதிய முகம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார் பேரறிவாளன்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 28, 2026
12:15 pm

செய்தி முன்னோட்டம்

எந்த நீதிமன்றத்தில் தனது 31 கால விடுதலைக்காகவும், நீதிக்காகவும் சட்டப் போராட்டங்களை நடத்தினாரோ, அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று(ஏப்ரல் 27, 2026) பேரறிவாளன் வழக்கறிஞராக முறைப்படி பதிவு செய்து கொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் அவர் வழக்கறிஞராக இணைந்ததையடுத்து, அவரது தாய் அற்புதம்மாள் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், சிறையில் இருந்தபோதே தனது கல்வியைத் தொடர்ந்தார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டப் படிப்புகளில் சிறந்து விளங்கிய அவர், 2022-ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு, தனது சட்டப்படிப்பை முழுமையாக முடித்து தற்போது வழக்கறிஞராகத் தகுதி பெற்றுள்ளார்.

தாயின் கனவு

அற்புதம்மாளின் கனவு நனவானது

தனது மகனின் விடுதலைக்காகத் தனியொரு பெண்ணாக நீதிமன்றப் படிக்கட்டுகளில் பலமுறை ஏறி இறங்கியவர் அற்புதம்மாள். "தனது மகன் கௌரவமான ஒரு தொழிலைச் செய்ய வேண்டும்" என்ற அவரது நீண்ட காலக் கனவு இன்று நனவாகியுள்ளது. வழக்கறிஞர் கருப்பு அங்கியில் தனது தாயுடன் பேரறிவாளன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பின்னணி

வரலாற்றுப் பின்னணி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன் ஆகியோருடன் பேரறிவாளனுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு நிறைவேற்றிய 7 தமிழர் விடுதலை தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் (Article 142) பயன்படுத்தி 2022-இல் பேரறிவாளனை விடுவித்தது. எந்த நீதிமன்ற வளாகத்தில் கைதியாகப் பலமுறை ஆஜர்படுத்தப்பட்டாரோ, அதே இடத்தில் இனி மற்றவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞராகப் பேரறிவாளன் கால் பதித்துள்ளது ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement