ஆதரவற்றோர், முதியோர் உதவித்தொகையினை உயர்த்த முடிவு - தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இன்று(ஜூலை.,22)சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்.,மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10.30மணியளவில் அமைச்சரவை கூட்டமானது துவங்கி நடந்துவருகிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம், தமிழக ஆளுநரின் செயல்பாடுகள், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், உள்ளிட்ட விவகாரங்கள் என தற்போது நிகழும் இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அதில் ஒன்றாக, கைம்பெண் மற்றும் முதியோர்-ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையான ரூ.1000 உயர்த்தப்பட்டு ரூ.1,200ஆக வழங்க முடிவுச்செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, இக்கூட்டம் முடிந்தப்பின்னர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசவுள்ளார்.
அப்போது அவர், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த முழுவிவரங்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
உதவித்தொகை அதிகரிப்பு
#BREAKING முதியோர் உதவித்தொகையை உயர்த்த முடிவு #TNGovt #CabinetMeeting #MKStalin #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/n6Yiskx2YZ
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 22, 2023