சிறு குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் செயல்படும் சிறு-குறு நிறுவனங்களுக்கு அதிக மின் பயன்பாட்டு நேரங்களில் அதாவது பீக் ஹவர்ஸ் நேரங்களில் மட்டும் மின் கட்டணத்தினை குறிப்பிட்ட சதவீதத்திற்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு-குறு நிறுவனங்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இவர்களின் கோரிக்கை மற்றும் தொடர் போராட்டம் காரணமாக தற்போது மின்சார வாரியம் இதற்கான கட்டணத்தினை குறைத்து புது அரசாணையினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிறு-குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் மின் பயன்பாட்டிற்கான கட்டணம் 15 முதல் 25%வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சோலார் மேற்கூரை நெட்வொர்க்கிங் கட்டணத்திலும் 50%குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ.191.10 கோடி வரை இழப்பீடு ஏற்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மின் கட்டணம் குறைப்பு
#JUSTIN பீக் ஹவர்ஸ் கட்டணம் குறைப்பு - அரசாணை வெளியீடு #TNGovt #ElectrictyBill #News18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/Fh9tEvwMm4
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 11, 2023