ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம்
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கினை பதிவு செய்திருந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவரின் பதவி நீக்க எதிரொலியாக அவரது எம்.பி.பதவியும் பறிக்கப்பட்டு, அவரது அரசு பங்களாவில் இருந்து காலி செய்ய நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
சுஷில் குமார் மோடி சார்பில் சாட்சிகளிடம் வாக்குமூலம்
இதற்கிடையே தற்போது மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பாட்னா நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மோடி குறித்து அவதூறாக பேசியதற்கு பீகார் பாஜக மூத்த தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுஷில் குமார் மோடி இவ்வழக்கினை தொடர்ந்தார். அதன்படி ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பாட்னா நீதிமன்றம் கூறியுள்ளது. இது குறித்து சுஷில் குமார் மோடி கூறுகையில், பாட்னாவின் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ராகுல் காந்தி தரப்பு அறிக்கையினை பதிவு செய்யும் முன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் என் தரப்பில் இருந்து நான்கு சாட்சிகளிடன் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.