மெட்ரோவில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை மெட்ரோ நிறுவனம் அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், மெட்ரோ ரயில்கள் தற்போது 54.6கி.மீ., நீளத்தில் விமான நிலையம்-விம்கோ நகர் பணிமனை வரையும்,
புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் மெட்ரோ-பரங்கிமலை மெட்ரோ வரையும் இயக்கப்படுகிறது.
இதன்படி, இந்த மெட்ரோ ரயில் சேவை துவங்கியதிலிருந்து சுமார் 24 கோடி பயணிகள் இதில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மெட்ரோவில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக வரும் டிசம்பர் 15ம்.,தேதி 2023ம் ஆண்டு முதல் வரும் மார்ச் 15ம்.,தேதி 2024ம் ஆண்டு வரை 3 மாதங்கள் என்னும் வகையில்,
ஒவ்வொரு மாதமும் இந்த சிங்கார சென்னை அடையாள அட்டையினை பயன்படுத்தி அதிகளவு பயணம் செய்யும் முதல் 40 பயணிகள் தேர்வுச்செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ
பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசு பொருட்கள் வழங்கவுள்ளது
இதனை தொடர்ந்து அந்த அறிக்கையில், அவ்வாறு தேர்வு செய்யப்படும் பயணிகளுக்கு சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பரிசு பொருட்களை மெட்ரோ நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து வழங்கவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண அனுபவத்தினை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த பரிசு பொருட்கள் வழங்கும் திட்டம் துவங்கப்படவுள்ளது.
இதனையடுத்து, இதனை மெட்ரோ பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் மெட்ரோ நிறுவனம் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவை துவங்கப்பட்ட பின்னர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் போகவேண்டிய இடங்களுக்கு தாமதமின்றி செல்ல பேருதவியாக இருக்கிறது என்று பயணிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மெட்ரோ நிறுவனத்தின் அறிக்கை
#JustIn | சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு, 2024 மார்ச் 15ம் தேதி வரை 3 மாதங்கள் பரிசு பொருட்களை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு
ஒவ்வொரு மாதமும் சிங்கார 40 பயணிகளை தேர்வு செய்து பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.#SunNews | #ChennaiMetro |… pic.twitter.com/wqhEedFklQ — Sun News (@sunnewstamil) December 19, 2023