NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு
    இந்தியா

    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு

    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு
    எழுதியவர் Nivetha P
    Feb 11, 2023, 06:24 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு
    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு

    சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் 12,380 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் கடந்த மாதம் முழுவதும் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 17,61,426 என கூறப்படுகிறது. அதுவே கடந்த டிசம்பர் மாதம் 12,103 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், 17,22,496 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். இதன்படி, ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு வரலாற்றில் முதன்முறையாக 56,822 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். இதுவே டிசம்பர் மாதத்தில் நாளொன்றுக்கு 392 விமானங்களில் 55,565 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள்.

    டிசம்பர் மாதம் 23ம் தேதி ஒரே நாளில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணம்

    அதன்படி ஒப்பிட்டு பார்க்கையில் டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் விமானங்களின் எண்ணிக்கையும் , பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து வரலாற்றில் முதன்முறையாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிகளவு விமானங்களில் அதிகளவு பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை. மேலும் டிசம்பர் மாதம் 23ம் தேதி ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணித்தனர் என தகவல்கள் தெரிவிக்கிறது. சென்னை விமான நிலைய வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்ச பயணிகள் பயணம் செய்தது பெரும் சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சென்னை
    விமானம்
    தமிழ்நாடு செய்தி

    சென்னை

    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு தமிழ்நாடு
    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு மு.க ஸ்டாலின்
    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி

    விமானம்

    விமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு சென்னை
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    டெல்லி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய 2 இந்திய பயணிகள் கைது டெல்லி

    தமிழ்நாடு செய்தி

    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை
    வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று! வைரல் செய்தி
    ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம் கோவை
    ஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023