
தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
அதன் காரணமாக தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு கூறுகையில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால், தேர்தல் பரப்புரை நாளை மாலை 6 மணியுடன் நிறைவடையும்".
தேர்தலுக்கான பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் 92% நிறைவுபெற்றுள்ளதாகவும், இன்று மாலையுடன் பூத் ஸ்லிப் வழங்கும் பணி நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு, தேர்தலன்று விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
embed
தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு
#ElectionUpdate | மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது!#SunNews | #Elecciones2024 | #TamilNadu | #ElectionsWithSunNews pic.twitter.com/HlbH0Tid1O— Sun News (@sunnewstamil) April 16, 2024