
ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக'வை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்த கூட்டணியின் பெயர் தான் 'இந்தியா'.
இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்துள்ள நிலையில், அவ்வப்போது இக்கூட்டணி பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகளை மேற்கொள்வது வழக்கம்.
மேலும் இவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான குழுக்களை அமைக்கும் பணியினை துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இவர்களுள் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில் உறுதியான முடிவினை எடுக்கமுடியாத நிலை உள்ளதால், தேர்தல் நடந்து முடிந்த பின்னர் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்யலாம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கூட்டம்
போராட்டம் குறித்து 16 மாணவர்கள் அமைப்பு ஒன்றிணைந்து முடிவு
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'இந்தியா' கூட்டணியின் மாணவர் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியானது.
இதனிடையே வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று(நவ.,21) நடைபெற்ற நிலையில், 16 மாணவர்கள் அமைப்பு ஒன்றிணைந்து இந்த முடிவினை எடுத்துள்ளனர்.
'தேசிய கல்வி கொள்கையினை நிராகரித்து, கல்வியை காப்பாற்றுவோம்' என்றும்,
'பாஜகவை நிராகரித்து, இந்தியாவை காப்பாற்றுவோம்' என்றும் உறுதிமொழிகள் கொண்டு மாணவர்கள் இப்போராட்டம் குறித்த முடிவினை எடுத்துள்ளனர் என்று தெரிகிறது.
ட்விட்டர் அஞ்சல்
முற்றுகை போராட்டம் குறித்த தகவல்
#JUSTIN || "ஜன.12ல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்"
"2024 ஜன.12ல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்த முடிவு"
இந்திய கூட்டணியின் மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு என தகவல் #parliament |… pic.twitter.com/kw5HayU7aR — Thanthi TV (@ThanthiTV) November 21, 2023