Page Loader
தன் காதலனை தேடி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒரு உளவாளியா?
ஆன்லைன் கேம்மான PUBG விளையாடும்போது இருவரும் தற்செயலாக ஆன்லைனில் சந்தித்திருக்கின்றனர்.

தன் காதலனை தேடி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒரு உளவாளியா?

எழுதியவர் Sindhuja SM
Jul 19, 2023
12:48 pm

செய்தி முன்னோட்டம்

மே மாதம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் சீமா ஹைதர்(30) மற்றும் அவரது இந்திய காதலர் சச்சின் மீனா(22) ஆகியோரை உத்தரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS) இரண்டாவது முறையாக விசாரித்து வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர், கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் தனது காதலரான சச்சின் மீனாவை திருமணம் செய்வதற்காக தனது 4 குழந்தைகளோடு சமீபத்தில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். ஆன்லைன் கேம்மான PUBG விளையாடும்போது இருவரும் தற்செயலாக ஆன்லைனில் சந்தித்திருக்கின்றனர். இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக தங்கி இருந்ததற்காக சீமா ஹைதரையும்(30), சச்சின் மீனாவையும்(25) போலீஸார் கைது செய்தனர். ஆனால், உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள நீதிமன்றம் அவர்களுக்கு கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது.

விஜித்வ்

அவர் திட்டமிட்டு இந்தியாவிற்குள் நுழைந்திருக்கிறார்: உளவுத்துறை

இந்நிலையில், சீமா ஹைதர், வேண்டுமென்றே இந்திய அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக கிராமப்புற இந்தியப் பெண்ணைப் போல் உடையும் மேக்கப்பும் அணிந்து நடித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் இந்தியா டுடேயிடம் தெரிவித்துள்ளன. அவர் கவனமாக திட்டமிட்டு, இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாத வகையில் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கிறார் என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல், அவரது பேச்சு வழக்கும் இந்திய பேச்சு வழக்கு போலவே இருக்கிறது. அதற்கு அவர் நேபாள பார்டரில் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறை நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்(ஐஎஸ்ஐ) ஆகியவையுடன் சீமா ஹைதருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து ATS மற்றும் உளவுத்துறை விசாரித்து வருகிறது.