Page Loader
மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது
பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கி வெற்றிப்பெற்றவருக்கு நிஸான் கார் பரிசளிக்கப்பட்டது

மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது

எழுதியவர் Nivetha P
Jan 17, 2023
07:40 pm

செய்தி முன்னோட்டம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட பாலமேட்டில் நேற்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி அரங்கேறியது. தமிழக வணிகவரித்துறை அமைச்சர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர். ஒன்பது சுற்றுகள் கொண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் 877 காளைகள் களம் கண்டது, 345 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி காளைகளை பிடிக்க முயன்றனர். இதில் 31 பேர் காயமடைந்த நிலையில், பாலமேட்டை சேர்ந்த அரவிந்த் ராஜ் என்பவரது மார்பு பகுதியில் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பரிசு

முதல் இடத்தை பெற்ற மாடுபிடி வீரருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிஸான் கார் பரிசு

இதனையடுத்து, சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் 23 காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிஸான் காரை பரிசாக பெற்றார். அடுத்து, பாலமேட்டை சேர்ந்த மணி என்பவர் 19 காளைகள் பிடித்து இரண்டாம் இடத்தை பெற்றார். இவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட ரங்கராஜபுரம் கருப்பசாமி கோயில் காளை முதல் இடத்தை பிடித்தது. இந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மானூத்தை சேர்ந்த மணி என்பவரது காளை இரண்டாவது இடத்தை பிடித்த நிலையில், அவருக்கு ஒரு பசு கன்றுக்குட்டியுடன் பரிசாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.